உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவைத் பெற்றுத் தருகிறோம்- சஜித் பிரேமதாஸ.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

பலவீனமான இந்த அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் திட்டத்தில், 6 ஆம் தர பாட அலகுச் சீர்திருத்தங்களைச் முறையாக முன்னெடுக்கத் தவறியதால் ஏராளமான பிள்ளைகள் இன்று பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர்.

கல்விச் சீர்திருத்தங்களை இடைநிறுத்திய பழியை எதிர்க்கட்சியின் மீது போடுவதற்கு அரசாங்கம் முயன்ற போதிலும், அந்த சீர்திருத்தங்களை தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே இடை நிறுத்தியது.

6 ஆம் தரம் முதல் கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என, இலட்சக்கணக்கான பெற்றோர்களும் பிள்ளைகளும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும், அரசாங்கம் இதனை ஒத்தி வைத்ததன் காரணமாக அவர்களின் எதிர்பார்ப்புக்கள் கானல் நீராக மாறிப்போயுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே, கல்வித் துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடி, ஆபாச விடயங்களை நீக்கி, சரியாகவும் விரைந்தும் இந்த வருடமே இந்த கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கல்வித் துறையில் முற்போக்காக செயற்படும் நிபுணர்கள் காணப்படுகின்றனர். அவர்களுடன் கலந்துரையாடி முற்போக்கான முடிவை எடுக்குமாறு யோசனை முன்வைக்கின்றேன் என்றும், கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக இந்த அரசாங்கம் முறையான கலந்துரையாடலை முன்னெடுத்தால், எதிர்க்கட்சியும் தங்கள் கருத்துக்களை முன்வைக்கத் தயார் என்றும் இந்த சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பைப் பெற்றுத் தர நாம் தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.இன்றைய தினம் (26) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

51 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

37 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

61 0 0