உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கிளிநொச்சியில் வீதி புனரமைப்பு பணிகள் நிறைவு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தற்பொழுது பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குன்று குழியுமாக இருந்த வீதிகள், காபெட் வீதிகளாக புனரமைக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கோரக்கண்கட்டு பகுதியில் பல வருடங்களாக வீதி புனரமைக்கப்படாமல் குன்று குழியுமாக இருப்பதால், அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.இவ்வாறு பயன்படுத்த முடியாத நிலையில் பாதை இருந்தமையினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளர் காவு வண்டிகள், விவசாயிகள் என இவ்வீதி ஊடாக பயணிப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் வீதி புனரமைப்பு தருமாறு பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.தற்போது இந்த விடயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்கவின் தலையீட்டின் வீதிகள் புணரமைக்கப்பட்டு,மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த விதியானது, 1.5 கிலோமீட்டர் தூரம்வரை காபெட் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 45 மில்லியன் ரூபாய் செலவு விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வீதியை புணரமைத்து தந்தது போன்று எமது பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான பல்வேறு உதவி நலத்திட்டங்களையும் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

49 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

34 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

61 0 0