உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சட்டமா அதிபர் மீது அரசியல் முத்திரை குத்தி பதவி நீக்க முயற்சிப்பது நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச் செல்லும்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

“இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடம்பெறாத ஒழுக்கக்கேடான அரசியல் கலாச்சாரத்தின் ஆரம்பமாகவே சட்டமா அதிபரைப் பதவி நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இலண்டன் பயணம் குறித்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபர் மீது அரசியல் முத்திரை குத்தி அவரைப் பதவி நீக்க முயற்சிப்பது நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச் செல்லும் செயற்பாடாகும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் நீதி அமைச்சருமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

சட்டமா அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மற்றும் கணக்காய்வாளர் நியமனம் தாமதப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் ஊடகங்களிடம் தெளிவுபடுத்தும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கடந்த தேர்தல்களில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புக்களுடனேயே இந்த அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினர். தேர்தலுக்கு முன்னர் அநுர வழங்கிய பிரதான வாக்குறுதிகளில் ஒன்று சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதாகும். ஆனால் அந்த வாக்குறுதியை வழங்கிய ஜனாதிபதியும் இந்த அரசும் கணக்காய்வாளர் நாயகத்தை எப்போது நியமிக்கப் போகின்றனர் என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இடம்பெறும் சகல ஊழல், மோசடிகளையும் மறைப்பதற்கான சிறந்த முறைமையை அரசு தேர்ந்தெடுத்துள்ளது. கணக்காய்வாளர் இன்றி நாட்டை ஆட்சி செய்வதே அந்த முறைமையாகும்.

அரசமைப்புக்கமைய கணக்காய்வாளர் இன்றி நாட்டில் ஆட்சியை முன்னெடுக்க முடியாது. அதேபோன்று அரசமைப்புக்கமைய பிரதம நீதியரசர் ஒருவர் இன்றி ஒரு நாள் கூட நாட்டில் ஆட்சியை முன்னெடுக்க முடியாது. பிரதம நீதியரசர் இல்லாவிட்டால் ஒட்டுமொத்த நீதித்துறை கட்டமைப்பும் செயழிலக்கும்.

இந்த வரிசையில் சட்டமா அதிபரும் கணக்காய்வாளரும் இன்றி நாட்டில் ஆட்சி இடம்பெறாது. மாறாக இவர்கள் இன்றி முன்னெடுக்கப்படும் ஆட்சி ஜனநாயகத்துக்கு முரணானதாகும். கணக்காய்வாளர் பதவிக்குத் தகுதியான ஒருவரைப் பெயர் குறிப்பிட முடியாத நிலைமை அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்பதன் மூலம் அதன் பலவீனம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காகச் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் செயழிலக்கச் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்காக அரசின் ஆதரவாளர்களை ஏற்பாடு செய்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கின்றனர். எமது நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடம்பெறாத ஒழுக்கக்கேடான அரசியல் கலாச்சாரத்தின் ஆரம்பமாகவே சட்டமா அதிபரைப் பதவி நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தற்போதைய சட்டமா அதிபர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உதவியாள் எனக் கூறியே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால்தான் இந்தச் சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டார்.

அவரது பெயரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசமைப்புப் பேரவைக்குப் பரிந்துரைத்த போது, அதன் உறுப்பினர்கள் எவரும் அதற்கு எதிர்ப்பை வெளியிடவில்லை. இந்நிலையிலேயே இந்த அரசு அவர் மீது அரசியல் முத்திரை குத்தி அவரைப் பதவி நீக்கம் செய்ய முயற்சிக்கின்றது. இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்.

ரணில் விக்கிரமசிங்கவின் இலண்டன் பயணம் குறித்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வேறுபட்ட நிலைப்பாடு காணப்படுகிறது என்பதை நாம் அறிவோம். இந்த வழக்கில் மாத்திரமல்ல, எந்தவொரு வழக்கிலும் இவ்வாறான நிலைமை ஏற்படலாம்.

வழக்கறிஞர்கள் ஐவர் இருந்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திப்பர். அந்தவகையில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ளக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனைச் சட்டமா அதிபர் திணைக்களமே உள்ளகக் கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக்கொள்ளும். அதனை விடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களின் தேவைகளுக்கேற்ப சட்டமா அதிபரைப் பதவி நீக்கம் செய்ய முடியாது.

சட்டமா அதிபரின் தீர்மானத்துக்கு அப்பால் அரசால் செயற்பட முடியாது. மாறாக சட்டமா அதிபரின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்துவதாயின் அதற்கு நீதிமன்றத்தை நாட முடியும். அதனை விடுத்து ஆர்ப்பாட்டங்கள் ஊடாக சட்டமா அதிபரை இழிவுபடுத்துவதானது நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச் செல்லும் செயற்பாடாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

12 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

34 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

61 0 0