உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பாகிஸ்தானில் பாரிய தீ விபத்து- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
52 பார்வைகள்

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளதாகவும் , இதுவரை 23 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி இரவு எம்.ஏ. ஜின்னா வீதியில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.அவ்வளாகத்தில் உள்ள கட்டடத்தில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட மின்கசிவினால் தீ பரவியதாகவும் கட்டடத்தின் மூன்று தளங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மொத்த விற்பனை நிலையங்கள், சில்லறை விற்பனைக் கடைகள் உட்பட கட்டடத்தின் பெரும்பகுதியில் பாரிய தீ பரவி, பெரும் பொருட்சேதங்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மீட்புக் குழுவினர் கட்டடத்தில் சிக்கியுள்ள உடல்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் மீட்டு வரும் நிலையில், இதுவரை 73 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்காக டி.என்.ஏ பரிசோதனையும் நடத்தப்படும் நிலையில் நேற்று, இப்பரிசோதனை மூலம் 16 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதன்படி, இதுவரை 23 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

20 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0