பிலிப்பைன்ஸில் படகு விபத்து – 15 பேர் உயிரிழப்பு.!
பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான பசிலன் அருகில் 350 இற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.காணாமல் போனவர்களில் 316 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
குறித்த படகில் 332 பயணிகளும் 27 பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.