உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பாகிஸ்தான் – பங்களாதேஷ் இருதரப்பு உறவை மேம்படுத்த உறுதி.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
44 பார்வைகள்

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சரும் நேற்று (25) தொலைபேசியில் தொடர்புகொண்டு இருதரப்பு உறவை மேம்படுத்த உறுதிபூண்டதாக பாகிஸ்தான் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஒகஸ்ட் மாதம் பங்களாதேஷத்தில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு, பாகிஸ்தானும், பங்களாதேஷும் மிகுந்த நெருக்கம் காட்டி வருகின்றன. அரசியல் மற்றும் இராணுவத் தலைவா்கள் அவ்வப்போது சந்தித்துப் பேசி வருகின்றனர். அதே நேரத்தில் பங்களாதேஷத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையும், இந்திய எதிர்ப்பு போக்கும் அதிகரித்துள்ளது.இந்நிலையில், இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர். அப்போது, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய, சர்வதேச அரசியல் சூழல் குறித்தும் விவாதித்தனர்.

இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்பு அதிகரிப்பது, தொடர்ந்து இணக்கமாகச் செயல்பட்டு இரு தரப்பு உறவை மேலும் உறுதிப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

20 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0