உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த நாட்டை அழித்த கட்சிகள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

“ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ஓரணியில் இணைவதால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.” – என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அத்துடன் இரு கட்சிகளின் கடந்த அரசியல் வரலாற்றையும் அவர் விமர்சித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த நாட்டை அழித்த கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளும் இணைகின்றமையால் – புதிய கூட்டணி அமைகின்றமையால் எமது ஆட்சிக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.

தேசிய மக்கள் சக்தி அரசு நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், பொதுமக்களின் நலனுக்காகவும் செயற்படுகின்றது. நாட்டு மக்கள் எம் பக்கமே உள்ளனர்.

எனவே, ரணில் – சஜித் தரப்பினர் சேர்ந்தால் என்ன, சேராவிட்டால் என்ன எமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

12 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

34 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

61 0 0