உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக மின்சாரம் தடை.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
38 பார்வைகள்

அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதுடன், 10,000க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.அதேநேரம் பல வீதிகள் பனியால் மூடியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை பனி, பனிக்கட்டி மற்றும் உறைபனி மழை ஆகியவை “உயிருக்கு ஆபத்தான” நிலைமைகளை உருவாக்கி வருவதாகவும், இது பல நாட்கள் நீடிக்கக்கூடும் எனவும் அந்நாட்டின் தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.

லூசியானாவில் குறைந்தது இரண்டு பேர் தாழ்வெப்பநிலை (Hypothermia) காரணமாக உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் மரணங்கள் புயலுடன் தொடர்புடையவை என மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டெக்சாஸில் மற்றொரு மரணம் பதிவாகியுள்ளது.

அத்துடன் நேற்று பிற்பகல் நிலவரப்படி, 1 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.இதற்கிடையில், 10,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பரவலான கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழை ஆகியவற்றால் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களான சுமார் 180 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

20 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0