உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவின் 23 மாநிலங்களில் அவசர நிலை.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
48 பார்வைகள்

அமெரிக்காவில் கடும் குளிர்கால புயல் காரணமாக இன்று சுமார் 185 மில்லியன் மக்கள் குளிர்கால எச்சரிக்கைகளின் கீழ் உள்ளனர்.தெற்கு பகுதிகளிலிருந்து வடகிழக்கு வரை உள்ள 23 மாநிலங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புயலின் தாக்கத்தால் லூசியானா மாநிலத்தின் காடோ பாரிஷ் பகுதியில் வசித்த இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த இருவரும் கடும் குளிரால் ஏற்பட்ட ஹைப்போதெர்மியா (உடல் வெப்பநிலை அபாயகரமாக குறைவது) காரணமாக உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

புயல் தெற்கு பகுதிகளை தாக்கி தற்போது வடகிழக்கு நோக்கி நகர்ந்துவரும் நிலையில், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரமின்றி உள்ளனர்.

பல மாநிலங்களில் மின் இணைப்பினை மீள வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மத்திய மற்றும் கிழக்கு அமெரிக்காவின் பெரும்பகுதிகளில் ஆபத்தான அளவிலான கடும் குளிர் நிலவி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

சில பகுதிகளில் காற்றின் தாக்கத்துடன் கூடிய உணரப்படும் வெப்பநிலை மறை 20 முதல் மறை 30 பாகை செல்சியஸ் வரை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இயல்பை விட 10 முதல் 40 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை குறைவாக பதிவாகி வருகிறது.அடுத்த வாரத்திற்குள் நிலைமைகள் படிப்படியாக மேம்படும் என கணிக்கப்பட்டாலும், சில பகுதிகளில் பனிப்பொழிவும் கடும் குளிரும் தொடர வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கமாக விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உமேலும் நாளை 2,000 விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், கடும் குளிரிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

20 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0