மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்ட நாவலப்பிட்டி அனுருத்த குமார ஆரம்பப் பாடசாலை மீண்டும் திறப்பு .!
மண்சரிவு அபாயம் காரணமாக கடந்த 2 மாதங்களாக மூடப்பட்ட நாவலப்பிட்டி அனுருத்த குமார ஆரம்பப் பாடசாலை மீண்டும் திறப்பதற்கான பரிந்துரை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று (25) வழங்கியுள்ளது.
நவம்பர் 27 ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக, பாடசாலைக்கு மேலே அமைந்துள்ள ஸ்ரீ கவீஷ்வர வேலுவனாராம விகாரையின் பாதுகாப்பு மதில் மண்சரிவுக்கு உள்ளாகி இருந்தது. இதனால் பாடசாலை சுமார் இரண்டு மாதங்கள் மூடப்பட்டிருந்தது.
பாடசாலை மூடப்பட்ட காலத்தில் பெற்றோர்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. பெற்றோர்கள், அரசியல் முரண்பாடுகள் காரணமாக மண் மேட்டை அகற்றாமல் பாடசாலை திறக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இன்று குறித்த இடத்தில் ஆய்வு செய்த புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் புவிச் சரிதவியல் அதிகாரி சமந்த போகஹபிட்டிய, பாடசாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தேவையான வழிகாட்டல்களை வழங்கினார்.