உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற கடை உரிமையாளருக்கு அபராதம்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

70 ரூபாய் பெறுமதியான குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன உத்தரவிட்டார்.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைமை அலுவலக விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.70 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தல்கள் நான்கினை, தலா 90 ரூபாய் மற்றும் 100 ரூபாய் என அதிக விலைக்கு விற்றபோது அவர் கைதானார்.

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் 2021 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் இவர் தவறிழைத்துள்ளதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும், இவ்வாறான சட்டவிரோத விற்பனைகள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதால் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

1 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

34 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

54 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

61 0 0