உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
58 பார்வைகள்

அமெரிக்காவின் FBI அமைப்பினால் பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த கனடா நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் குழுவை வழிநடத்தியதற்காக மெக்ஸிகோவில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு செல்ட் லேக் சிட்டியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கனடா சார்பாக இவர் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்றுள்ளார்.மெக்ஸிகோவின் ‘சினலோவா’ (Sinaloa) கார்டெல் அமைப்புடன் சேர்ந்து கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாகிய நிலையில் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொலம்பியாவிலிருந்து மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா வழியாக கனடாவிற்கு சுமார் 60 மெட்ரிக் தொன் கொக்கோயின் போதைப்பொருளைக் கடத்தியுள்ளதுடன் தனக்கு எதிராகச் சாட்சி சொல்ல வந்தர்களை ஆட்கள் வைத்து கொலை செய்தாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மெக்ஸிகோவில் இவரை பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 40 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொகுசு மோட்டார் சைக்கிள்களையும் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களையும் சுமார் 55 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெக்ஸிகோவில் கைதுசெய்து அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டுள்ள இவரை நாளையதினம் (26) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.இதேவேளை, குறித்த வழக்கில் இதுவரை 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

20 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0