உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால் கனடாவுக்கு 100% வரி விதிக்கப்படும்! ட்ரம்ப் எச்சரிக்கை.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
56 பார்வைகள்

சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனேடியப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் மீது உடனடியாக 100% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் எந்த ஒப்பந்தம் என்பது குறித்து அவர் எவ்வித தகவல்களையும் வௌிப்படுத்தவில்லை.கடந்த வாரம், கனடா பிரதமர் கார்னி சீனாவுடன் ஒரு “மூலோபாய கூட்டாண்மையை அறிவித்ததோடு, வர்த்தக வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டார்.

அந்த நேரத்தில், ட்ரம்ப் இந்த நடவடிக்கையை “ஒரு நல்ல விஷயம்” என்று அழைத்தார்.ஆனால், சமீப நாட்களாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸில் ஆற்றிய உரையில், அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கு சிதைந்துவிட்டதாக பிரதமர் கார்னி கூறியதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.

அத்துடன் பெரிய வல்லரசுகளின்” பொருளாதாரக் கட்டுப்படுத்தலுக்கு எதிராக மற்றைய நடுத்தர நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் கார்னி வலியுறுத்தினார்.அவர் ட்ரம்ப்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இது அமெரிக்காவை நோக்கியே கருதப்பட்டது.

இதற்கு அடுத்த நாள் தனது உரையில் பதிலளித்த ட்ரம்ப், அமெரிக்காவால் தான் கனடா பிழைத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.மேலும், தனது புதிய ‘அமைதி ஒப்பந்தத்தில் சேர கனடாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் அமெரிக்க ஜனாதிபதி திரும்பப் பெற்றார்.

சீனப் பொருட்களை அமெரிக்காவிற்குள் அனுப்புவதற்கான ஒரு இறங்குத் துறையாக கனடாவை மாற்ற முடியும் என்று கார்னி நினைத்தால், அது முற்றிலும் தவறான விடயமாகும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

20 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0