உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவில் பனிப்புயல் – விமானங்கள் இரத்து!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
64 பார்வைகள்

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயல் காரணமாக விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று (24) மட்டும் 3,400 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும், இன்று (25) 5,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.


உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில், ஈஸ்ட் டெக்சாஸிலிருந்து நார்த் கரோலினா வரை பனிப்புயல் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பனிப்புயல் காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை உள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 14 கோடி மக்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


டெக்சாஸ், ஓக்லஹோமா, கன்சாஸ் ஆகிய மாநிலங்களில் நேற்று பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. அதேபோல், டகோடாஸ் மற்றும் மின்னெசோடா மாநிலங்களில் குளிர்காற்றின் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி செல்சியஸ்க்கும் கீழ் வீழ்ந்ததால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.லூயிசியானா, மிசிசிப்பி, டென்னிசி ஆகிய மாநிலங்களில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மரங்கள், மின்சார கம்பிகள், கோபுரங்கள் மற்றும் வீதிகளில் சுமார் ஒரு அங்குலம் தடிப்பில் பனி படர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமையை தொடர்ந்து பல பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

20 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0