உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஆபிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிளவடைகிறது: புதிய சமுத்திரம் உருவாகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
61 பார்வைகள்

ஆபிரிக்கக் கண்டம் ஒரு பிரம்மாண்டமான பிளவின் மூலம் மெதுவாக இரண்டு துண்டுகளாகப் பிரிந்து வருவதாகவும், இதன் விளைவாக எதிர்காலத்தில் ஒரு புதிய சமுத்திரம் உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.பூமியின் மேலோடு 15 முதல் 20 வரையான டெக்டோனிக் தகடுகள் (Tectonic Plates) எனப்படும் புவித் தகடுகளால் ஆனது.

ஆபிரிக்காவில் உள்ள கிழக்கு ஆபிரிக்க பிளவு (East African Rift – EAR) பகுதியில், ‘சோமாலிய தகடு’ மற்றும் ‘நுபிய தகடு’ ஆகிய இரண்டும் ஒன்றையொன்று விட்டு விலகிச் செல்கின்றன.இந்த தகடுகள் ஆண்டுக்கு சில மில்லிமீற்றர்கள் என்ற அளவிலேயே நகர்கின்றன.

எனவே, ஆபிரிக்கக் கண்டம் முழுமையாகப் பிரிந்து புதிய சமுத்திரம் உருவாக இன்னும் மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.எத்தியோப்பியாவின் அபார் (Afar) பகுதியில் மூன்று தகடுகள் சந்திக்கும் இடம் தனித்துவமானதாகும்.

இங்கு நிலப்பரப்பு கடல் மட்டத்திற்குக் கீழே செல்வதால், காலப்போக்கில் கடல் நீர் உட்புகுந்து புதிய சமுத்திரம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் பிளவு செயல்முறை சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது எனவும் இது செங்கடலில் இருந்து மொசாம்பிக் வரை சுமார் 2,174 மைல்கள் தூரம் நீண்டுள்ளது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலவியல் மாற்றம் மிகவும் மெதுவாக நடந்தாலும், கண்டத்தகடுகள் நகர்வதால் இந்தப் பகுதிகளில் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைச் செயல்பாடுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வர்ஜீனியா டெக் (Virginia Tech) பல்கலைக்கழக புவியியலாளர் டி. சாரா ஸ்டாம்ப்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலவியல் மாற்றம் மிகவும் மெதுவாக நடந்தாலும், கண்டத்தகடுகள் நகர்வதால் இந்தப் பகுதிகளில் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைச் செயல்பாடுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வர்ஜீனியா டெக் (Virginia Tech) பல்கலைக்கழக புவியியலாளர் டி. சாரா ஸ்டாம்ப்ஸ் தெரிவித்துள்ளார்.

பூமியின் உட்பகுதியிலிருந்து எழும் வெப்பக் குழம்பு (Magma), நிலத்தின் மேலோட்டை வலுவிழக்கச் செய்து அதனை உடைப்பதாலேயே ஆபிரிக்காவின் புவியியல் வரைபடம் மெல்ல மெல்ல மாறி வருகிறதென ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

20 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0