உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக்கோரல் தொடர்பில் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக்கோரல் தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நேற்று வவுனியாவில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

வவுனியா குருமன்காட்டிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.

கூட்டம் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் ஊடக அறிக்கையொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

ஊடக அறிக்கை
வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2011ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவிருந்த “கிவுல் ஓயா” நீர்ப்பாசனத் திட்டத்தை எந்தவிதமான மீளாய்வுமின்றி தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளமையானது தமிழ் மக்களுக்கு அதிலும் குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்குவதாக உள்ளது.

மேற்படி திட்டத்தை நிறுத்தக்கோருவது தொடர்பான கூட்டம் நேற்று (24.01.2026) வவுனியாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் இத்திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

கிவுல் ஓயா திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆபத்துக்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையாக எதிர்வரும் 30ஆம் திகதி (30/01/2026) வவுனியா வடக்கின் நெடுங்கேணி பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. அதேவேளை இத்திட்டத்தால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வை காண்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்பதையும் அரசாங்கத்திற்கு தெரிவிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0