உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பங்கு குறித்த ட்ரம்ப் கருத்துக்கு பிரித்தானியா கடும் கண்டனம்!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
47 பார்வைகள்

ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் பங்கு குறித்த ட்ரம்ப் கருத்துக்கு பிரித்தானியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப், நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தான் போரில் “முன்னணி வரிகளில் ஈடுபடவில்லை” என கூறியுள்ளார்.

“அமெரிக்காவுக்கு நேட்டோ எப்போதும் தேவையில்லை” என்றும், கூட்டாளிகள் அவசர நேரத்தில் உதவ மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துகள் பிரித்தானியாவில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளன.
பிரித்தானிய அரசியல்வாதிகள், “நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் பெரும் உயிரிழப்புகளை சந்தித்துள்ளன” எனக் குறிப்பிட்டனர்.20 ஆண்டுகள் நீண்ட போரில் 457 பிரித்தானிய வீரர்கள், 150 கனடியர்கள், 90 பிரெஞ்சு வீரர்கள், 44 டேனிஷ் வீரர்கள் உயிரிழந்தனர்.

பிரித்தானிய அமைச்சர் ஸ்டீபன் கின்னொக், “இது மிகுந்த ஏமாற்றம் தரும் கருத்து எனவும் பல்வேறு நாடுகளின் வீரர்கள் அமெரிக்கா தலைமையிலான நடவடிக்கைகளில் உயிர்நீத்துள்ளனர்” எனவும் கூறியுள்ளார்.இதேவேளை, இது குறித்து லிபரல் டெமோக்ராடிக் கட்சித் தலைவர் எட் டேவி, கூறுகையில் “ட்ரம்ப் வியட்நாம் போரில் ஐந்து முறை சேவையைத் தவிர்த்தவர் எனவும்
அவர் வீரர்களின் தியாகத்தை கேள்வி கேட்பது தவறு” எனவும் கடுமையாக விமர்சித்தார்.

இந்த விவகாரம், அமெரிக்கா-ஐரோப்பிய கூட்டணி உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.நேட்டோவின் பங்கு மற்றும் அதன் எதிர்காலம் குறித்து உலகளவில் விவாதம் தீவிரமாகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

20 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0