உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அமெரிக்காவில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு! வீதிக்கிறங்கிய ஆர்ப்பாட்டக்காரர்களால் பதற்றம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
59 பார்வைகள்

அமெரிக்காவின் மினிசொட்டா மாநிலத்தின் மினியாபோலிஸ் (Minneapolis) நகரில் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் திணைக்களத்தை சேர்ந்த ஃபெடரல் குடிவரவு அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவத்தையடுத்து, மினசோட்டா மாநில ஆளுநர் டிம் வால்ஸ் (Tim Walz), வெள்ளை மாளிகையுடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மத்திய அதிகாரிகளால் நடத்தப்பட்ட மற்றுமொரு பயங்கரமான துப்பாக்கிச் சூடு இதுவென சாடியுள்ள அவர், வன்முறையில் ஈடுபடும் பயிற்சியற்ற ஆயிரக்கணக்கான அதிகாரிகளை மினசோட்டாவிலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கடுமையாக எச்சரித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டுள்ளனர்.அங்கு போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும்முறுகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாத தொடக்கத்தில், ரெனீ குட் (Renee Good) என்ற அமெரிக்கப் பெண்மணி ஒருவரும் குடிவரவு அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.அந்தச் சோகம் மறைவதற்குள் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

20 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0