உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கொலம்பியாவின் இராணுவப்படை முன்னாள் துணை தளபதிக்கு – 40 ஆண்டுகள் சிறை

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
37 பார்வைகள்

கொலம்பியா நாட்டின் இராணுவப்படை முன்னாள் துணை தளபதியான சால்வடோா் மங்குசோவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.1990-களின் இறுதியில் ஐக்கிய தற்காப்புப் படைகளின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான மங்குசோ, கிளா்ச்சியாளா்களுக்கு எதிரான போா்வையில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவா்.

கடந்த 2002-2006 காலகட்டத்தில், பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரமான படுகொலைகள், ஆட்கடத்தல் உள்ளிட்ட 117 குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக நிரூபிக்கப்பட்டுள்ளன.எனினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவும், உண்மைகளை வெளிப்படுத்தவும் இவா் அரசுடன் முழுமையாக ஒத்துழைத்தால், இந்தத் தண்டனை 08 ஆண்டுகளாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலம்பியாவின் தற்போதைய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, இவரை ஓா் அமைதி தூதுவராக நியமித்துள்ளாா். இதன்மூலம், அந்நாட்டின் ஆயுதக் குழுக்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட, இவா் ஒரு மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகின்றாா்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

20 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

45 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

41 0 0