உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

லண்டன் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய இளவரசர் ஹாரி.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
52 பார்வைகள்

பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி, ‘டெய்லி மெயில்’ (Daily Mail) பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியம் அளித்துள்ளார்.அதன்போது, அந்தப் பத்திரிகையின் செயல்பாடுகளால் தனது மனைவி மேகனின் வாழ்க்கை “முற்றிலும் நரகமாக” மாறியதாக அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் (ANL) என்ற நிறுவனம், சுமார் 20 ஆண்டுகளாக தனது தனிப்பட்ட தகவல்களைச் சட்டவிரோதமாகச் சேகரித்ததாக இளவரசர் ஹரி உட்பட 7 முக்கியப் பிரமுகர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இதில் எல்டன் ஜோன் போன்ற பிரபலங்களும் அடங்குவர். தான் எப்போதும் 24 மணிநேரக் கண்காணிப்பில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும், இது தன்னை மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகவும் ஹரி கூறினார்.

தனது முன்னாள் காதலி செல்சி டேவி குறித்தும் பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிட்டன.இதனால் அவர் தனது நண்பர்களையே சந்தேகப்படும் நிலை உருவானது என்றும், ஒருவரை வேட்டையாடுவது போன்ற உணர்வை அந்தப் பத்திரிகைகள் ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தமக்குத் தேவையானது எல்லாம் ஒரு “மன்னிப்பும், பொறுப்புக்கூறலும்” மட்டுமே என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பத்திரிகை நிறுவனம், இதற்கான தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று வாதிட்டுள்ளது.ஹானரியின் தரப்பு “வைக்கோல் துரும்பைப் பிடித்துத் தொங்குவதாகவும்”அவர்கள் விமர்சித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

40 0 0