உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பலஸ்தீன சிறுவர்களின் கால்பந்து மைதானத்தை இடிக்கும் முடிவை ஒத்திவைத்துள்ள இஸ்ரேல்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
39 பார்வைகள்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பெத்லகேம் நகரில், பாலஸ்தீன சிறுவர்களின் கால்பந்து மைதானத்தை இடிக்கும் முடிவை இஸ்ரேல் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.முறையான அனுமதி இன்றி இந்த மைதானம் கட்டப்பட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக இதை இடிக்க வேண்டியது அவசியம் என்றும் இஸ்ரேல் தெரிவித்தது.இந்தநிலையில் இந்த மைதானத்தைக் காக்க ஒரு சர்வதேச பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்ட மனு, அதிகாரிகளைத் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வைத்ததாகத் தெரிகிறது.

இது எய்தா (Aida) அகதிகள் முகாம் அருகே, இஸ்ரேலின் பாதுகாப்புச் சுவருக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.இந்த மைதானத்தில் பயிற்சி பெறும் 10 வயது சிறுமி நயா கூறுகையில், “எங்களுக்கு விளையாட வேறு இடம் இல்லை.இது எங்கள் கனவுகளை உருவாக்கும் இடம். மைதானத்தை இடித்தால், எங்கள் கனவுகளையும் இடிப்பது போலாகும்” என்று கவலையுடன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இந்த மைதானம் சட்டவிரோதமானது என்ற அறிவிப்பு அதன் வாயிலில் ஒட்டப்பட்டது.அதைத் தொடர்ந்து டிசம்பர் இறுதியில் இடிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டது.தற்போது இந்த இடிப்பு நடவடிக்கை “தற்காலிகமாக” ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்தது. இருப்பினும், இது குறித்து தங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்று கால்பந்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன மக்கள் தரப்பில், “ஒரு சிறிய விளையாட்டு மைதானத்திற்கு அனுமதி மறுக்கும் இஸ்ரேல், சர்வதேச சட்டப்படி சட்டவிரோதமான பெரிய குடியேற்றங்களை மேற்குக் கரையில் அமைத்து வருகிறது” என்று குற்றம் சாட்டுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

40 0 0