உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர தயார்; மக்களின் காணிகளை மக்களிடம் வழங்குங்கள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர நாம் தயார். ஆனால் சட்டமுரணாக கையகப்படுத்தியுள்ள மக்களின் பூர்வீக காணிகளை மக்களிடம் வழங்குங்கள் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் நாயகம் அருள் ஜெயந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று ஊடக சந்திப்பை மேற்கொண்ட அவர் மேலும் கூறுகையில்,

தையிட்டி விகாரையை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அது அமைக்கப்பட்ட விடயம் குறித்தே மக்கள் போராடுகின்றனர்.

இதே நேரம் கடந்த அரசுகள் போன்று அநுர அரசும் இனவாதத்தை தொடர்ந்தும் பேசாமல் அதை தடுக்க நாடாளுமன்றில் சட்டம் இயற்றி நடைமுறையாக்க வேண்டும்.

இதேநேரம் நாட்டில் எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலும் கிடையாது. அதனால் பயங்கரவாத தடைச் சட்டம் இனிமேலும் நாட்டுக்குத் தேவையற்ற ஒன்றாக இருக்கின்றது.

அநுர அரசு ஆட்சிக்கு வரும்போது கூறிய விடயங்கள் ஒன்று, இன்று செயற்படுத்துவது இன்னொன்று.

திஸ்ஸ விகாரை, செம்மணி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு தருவோம் என்றார்கள். ஆனால் அவை அனைத்தும் இன்று காணாமல் போய்விட்டது.

இதேவேளை வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் வந்து அச்சமின்றி பாதுகாப்பின்றி நடந்து செல்ல ஜனாதிபதியால் முடியுமாக இருந்தால் இன்னும் எதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கின்றது. எதற்காக அதற்கு மாற்றீடான சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

50 0 0