மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!
ஹோமாகம புத்தக களஞ்சியசாலையின் விடுதியில் தங்கியிருந்த பணியாளர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் சம்பவத்தன்று இரவு தனது சக பணியாளர்களுடன் இணைந்து விடுதியில் மதுபானம் அருந்திவிட்டு உறங்கியுள்ள நிலையில், மறுநாள் காலை எழுந்திருக்காததால் சக பணியாளர்களின் உதவியுடன் நோயாளர் காவுவண்டி ஊடாக ஹோமாகம வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும் இவர் ஏற்கனமே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.