உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தின் நிலத்தோற்றத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடைபெறும் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தின் நிலத்தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது என்றும் அவ்வாறு ஏதும் செய்வதாயின் நீதிமன்ற அனுமதி அவசியம் எனவும் நீதிமன்றினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பகுதியில் ஏற்கனவே இருந்த வீதிக்கு மேலாக அதனை நல்லூர் பிரதேச சபையினர் செப்பனிட்டமை அவதானிக்கப்பட்டது. குறித்த விடயம் சட்டத்தரணிகளால் நீதிவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அதனை தொடர்ந்து, குறித்த பகுதியில் எந்தவிதமான அபிவிருத்தியும் செய்வதற்கான அனுமதியும் கொடுக்கக் கூடாது எனவும் முழுமையான அகழ்வு பணிகள் பூர்த்தியாகும் வரை நிலத்தோற்றத்தில் மாற்றம் செய்யக்கூடாது என்றும் இதில் எதிர்வரும் காலத்தில் எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தின் அனுமதி அவசியம் என சட்டத்தரணிகளால் வலியுறுத்தப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் குறித்த விடயத்தை கவனம் செலுத்தி எதிர்காலத்தில் செயற்பட உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

50 0 0