உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் டயர் சந்திக்கு அருகில், நேற்று திங்கட்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உந்துருளி ஒன்று, பேருந்தின் பின்புறத்தில் மோதியதில், உந்துருளி ஓட்டுநர் தூக்கி வீசப்பட்டு பின்னால் வந்த லொறியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டுநர், கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் இம்புல்கொட பகுதியை சேர்ந்த 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்து மற்றும் லொறி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்,

கிரிபத்கொட பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, ஹசலக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவன்தன வீதியிலிருந்து குருலுபொத்த பிரதான வீதியை நோக்கி மரங்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உழவு இயந்திர சாரதி, ஹசலக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் பரவர்தனஓயா பகுதியை சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

50 0 0