ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு.!
காலியில் அஹங்கம, கதலுவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி முதியவர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (19) உயிரிழந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹாவயிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரஜரட்ட ரஜின ரயிலில் மோதியே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் இமதுவ பகுதியைச் சேர்ந்த 82 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை அஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.