உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சிரிய அரசு – குர்திஷ் படை இடையே போர் நிறுத்தம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
46 பார்வைகள்

குர்திஷ் பொதுமக்கள் மற்றும் இராணுவ நிர்வாகத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் வகையில் சிரிய அரசு மற்றும் குர்திஷ் படைகள் இடையே உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. சிரிய துருப்புகள் பிரதான எண்ணெய் வயல்கள் உட்பட நிலங்களை கைப்பற்றிய அண்மைய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின்படி குர்திஷ்களின் சிரிய ஜனநாயகப் படை, சிரிய இராணுவத்துடன் இணைக்கப்படவுள்ளது. இதன்மூலம் முன்னர் குர்திஷ் படை கட்டுப்பாட்டில் இருந்த மூன்று கிழக்கு மற்றும் வடக்கு நிர்வாகங்கள் சிரிய அரச நிர்வாகத்திற்குள் வரும் என்று ஜனாதிபதி அஹமது அல் ஷரா அறிவித்துள்ளார். சிரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி டொம் பரக்கை டமஸ்கஸில் சந்தித்த பின்னரே அல் ஷரா இந்த அறிப்பை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பிரதான எண்ணெய் வளம் கொண்ட மற்றும் கோதுமை உற்பத்தி செய்யும் இரு அரபு பெரும்பான்மை மாகாணங்கள் மற்றும் யூப்ரடிஸ் நதியை ஒட்டிய முக்கிய நீர் மின் அணைகள் உள்ள ரக்காவில் இருந்து வாபஸ் பெற இணங்கியதாக குர்திஷ் படை தளபதி அஸ்லு{ம் அப்தி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் கடந்த ஒரு தசாப்த காலமாக நீடிக்கும் உள்நாட்டுப் போரின்போதே அமெரிக்காவின் உதவியுடன் குர்திஷ் தலைமையிலான படை சிரியாவில் சுயாட்சி நிர்வாகம் ஒன்றை நிறுவியது. குறிப்பாக இஸ்லாமிய அரசு குழுவுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் உள்நாட்டு கூட்டணியாகவே இந்த குர்திஷ் படை இயங்கி வந்தது.அமெரிக்காவின் உதவியுடன் வடகிழக்கு சிரியாவில் இருந்து இஸ்லாமிய அரசுக் குழுவை பின்வாங்கச் செய்த சிரிய ஜனநாயகப் படை அங்கு குர்திஷ் மற்றும் அரபு பெரும்பான்மை பிராந்தியங்களை நிர்வகித்து வந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

40 0 0