உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

எதிரணியின் மிரட்டலுக்கு இந்த அரசு அடிபணியாது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

எதிர்க்கட்சிகளின் மிரட்டல் நாடகங்களுக்கு இந்த அரசு அடிபணியாது என்று அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.

“போலியான விடயங்களைக் குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றமையாலும், இன்னொரு தரப்பினர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடுபட்டமையாலும் புதிய கல்விக்கொள்கை அமுல்படுத்தல் பிற்போடப்படவில்லை. நடைமுறையில் தோற்றம் பெற்ற சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காகவே ஆறாம் தரத்துக்கான புதிய பாடத்தொகுதி 2027 ஆம் ஆண்டு வரை பிற்போடப்பட்டுள்ளது.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் தற்போதைய பிரதான பேசுபொருளாக கல்விச் சீர்த்திருத்தம் காணப்படுகின்றது. எதிர்க்கட்சிகளின் போலியான குற்றச்சாட்டுக்களினால் தவறான நிலைப்பாடு தீவிரமடைந்தது.

எதிர்க்கட்சித் தலைவரும் இனவாதிகளின் நிலைக்குத் தள்ளப்பட்டமை அதிருப்திக்குரியது. புதிய கல்வித் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுகின்றமையாலும், சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டமையாலும் புதிய கல்விக் கொள்கையை அரசு பிற்போடவில்லை.

ஆறாம் தரத்துக்கான புதிய பாடத்திட்டம் மாத்திரமே 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை தொடர்பில் விரிவான கலந்துரையாடலில் ஈடுபடுவோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

52 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

24 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

49 0 0