சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது.!
நவகமுவ – போமிரிய பகுதியில் நேற்று திங்கட்கிழமை (19) சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதுடன், பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மல்வானை பகுதியைச் சேர்ந்தவர்கள், 39 மற்றும் 44 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நவகமுவ பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 405 லீற்றர் சட்டவிரோத மதுபானம், மதுபானம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் 9236 லீற்றர் கோடா, 10 மூட்டை சீனி, ஒரு எரிவாயு சிலிண்டர், 02 தண்ணீர் மோட்டார்கள் மற்றும் வேன் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
நவகமுவ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.