உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அநுரவின் சொந்த ஊரில் பலத்தை காட்டிவிட்டோம்; மொட்டு கட்சி பெருமிதம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
16 பார்வைகள்

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சொந்த ஊரில் வெற்றிகரமாக கூட்டத்தை நடத்தி எமது அரசியல் பலத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2026 ஆம் ஆண்டுக்குரிய முதலாவது கூட்டத்தை ஜனாதிபதியின் சொந்த ஊரிலேயே (தம்புத்தேகம) நடத்திக் காட்டினோம்.

இக்கூட்டத்தை நடத்துவதற்குப் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன. கொடி நடுவதற்குக்கூட இடமளிக்கப்படவில்லை. ஆனால் மக்கள் அணிதிரண்டு வந்து சிறந்த பதிலை வழங்கினர்.

அதேவேளை, அநுரகுமார திஸாநாயக்கதான் ஜனாதிபதி என்பதை நாம் ஏற்கின்றோம்.

அவருக்குப் பின்னால் ஜே.வி.பியினர் மற்றும் அக்கட்சியினருடன் தொடர்புடையவர்கள் இந்நாட்டில் ஜனாதிபதி பதவிக்கு வரமுடியாது.

பொய்களை நம்பி ஏமாந்தது போதும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். எனவே, நாட்டை நேசிக்கக்கூடிய ஒருவரை மக்கள் தெரிவு செய்வார்கள்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

52 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

24 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

49 0 0