உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பல கோடி ரூபாய் பணத்துடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 283,300,000 ரூபா பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (19) பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டில் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இந்த சந்தேக நபர் தொலைபேசி மூலம் தொடர்புகளை பேணி, அக்கடத்தல்காரரின் ஆலோசனையின் பேரில், இந்நாட்டிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து இப்பணத்தை சேகரித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தினால் குறித்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று (20) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

52 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

24 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

49 0 0