உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ட்ரம்பால் கேள்விக்குறியாகியுள்ள பல தசாப்த கால நட்பு – பெரும் பொருளாதார நெருக்கடி..!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
39 பார்வைகள்

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான மோதல் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியாக மாறியுள்ளது.

கிரீன்லாந்தை, அமெரிக்கா, வாங்குவதற்கு டென்மார்க் சம்மதிக்கவில்லையென்றால், 2026 பெப்ரவரி மாதம் முதல் எட்டு நேட்டோ (NATO) நட்பு நாடுகளின் பொருட்கள் மீது 10% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.ஜூன் மாதத்திற்குள் தீர்வு எட்டப்படாவிட்டால், இந்த வரி 25% ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை நோர்வே பிரதமருடனான உரையாடலில் ட்ரம்ப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்படாததால், இனி தான் “அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் தனது கடுமையான நிலைப்பாட்டை அவர் நியாயப்படுத்தியுள்ளார். இந்த நிலையில்,கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தைப் பயன்படுத்துவீர்களா?” என்ற கேள்விக்கு, ட்ரம்ப் “கருத்து ஏதுமில்லை” (No comment)* என்று பதிலளித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

23 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

40 0 0