உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உலக புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் 93 ஆவது வயதில் காலமானார்..!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
39 பார்வைகள்

உலக புகழ்பெற்ற இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் வெலண்டினோ கரவானி தமது 93 ஆவது வயதில் நேற்று(19) காலமானார்.ரோமில் உள்ள தனது இல்லத்தில், குடும்பத்தினர் சூழ அவர் அமைதியாக உயிர்நீத்ததாக வெலண்டினோ அறக்கட்டளை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.ஆடை வடிவமைப்பு உலகில் ‘வெலண்டினோ ரெட்’ என்ற தனித்துவமான சிவப்பு நிறத்தை அறிமுகப்படுத்தியவர் இவராவார். இது இன்றுவரை உலகப் புகழ்பெற்ற ஆடை அடையாளமாகத் திகழ்கிறது.

இளவரசி டயானா, அமெரிக்காவின் முன்னாள் முதற் பெண்மணி ஜெக்குலின் கென்னடி, நடிகை எலிசபெத் டெய்லர் மற்றும் நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற உலகப் புகழ்பெற்ற ஆளுமைகளுக்கு ஆடை வடிவமைத்த பெருமை இவருக்கு உண்டு.

ஜோர்ஜியோ அர்மானி மற்றும் கார்ல் லாகர்ஃபெல்ட் ஆகியோருக்கு இணையாக, ஆடை வடிவமைப்புத் துறை வணிகமயமாக மாறுவதற்கு முன்பிருந்த காலத்தின் மிகச்சிறந்த வடிவமைப்பாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

வெலண்டினோ கரவானின் உடல் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) முற்பகல் 11 மணியளவில் ரோமில் உள்ள புகழ்பெற்ற Basilica di Santa Maria degli Angeli e dei Martiri தேவாலயத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0