துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் 8,000 கொள்கலன்கள் : நெரிசலைக் குறைக்க அதிரடி தீர்மானம்.!
இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி காரணமாக துறைமுகத்தில் ஏற்படும் கொள்கலன் நெரிசலைக் குறைப்பதற்கான அவசர நடவடிக்கைளை எடுக்குமாறு துறைமுகங்கள் அமைச்சர் அனுர கருணாதிலக்க அறிவுறுத்தியுள்ளார்.அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அவர் இந்த விடயத்தை அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், தற்போது 8,000 கொள்கலன்கள் அனுமதியைப் பெறுவதற்காகத் தேங்கி இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.இதனிடையே, புதிதாக நிறுவப்பட்டுள்ள புளுமெண்டல் களஞ்சிய முனையத்திற்கு குறைந்த ஆபத்துள்ள கொள்கலன்களை அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத்தின் முழுமையான மேற்பார்வையின் கீழ் அனுமதி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.