உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மாணிக்கக்கல் இறக்குமதி வரியை தளர்த்த நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

நாட்டின் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்குத் தேவையான மூல மாணிக்கக்கற்களை இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் வரி நடைமுறையில் திருத்தம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இத்துறை சார்ந்தவர்களுக்குச் சலுகைகளை வழங்குவதையும், மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ஒரு பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டும் இலக்கை அடைவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அதிகாரசபையின் தலைவர் எஸ்.பி. சமிந்த, இது இறக்குமதியாளர்களுக்குப் பெரும் நிவாரணமாக அமையும் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மூல மாணிக்கக்கல் இறக்குமதியின் போது விதிக்கப்படும் வற் வரியைக் கணக்கிடும் முறையை மாற்றி, இறக்குமதியாளர்களுக்கு முன்பை விடப் பெரிய நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எமது புதிய முன்மொழிவின்படி, கொண்டுவரப்படும் ஒரு பொதிக்கு ஒரு குறிப்பிட்ட பெறுமதியை நாங்கள் நிர்ணயிப்போம். வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் பெறுமதிமிக்க கற்களான ரூபி, சஃபையர் (Sapphire), எமரல்டு (Emerald) போன்ற வகை கற்களை இறக்குமதி செய்யும் போது, ஒரு கிலோகிராமின் பெறுமதியை சுமார் 900 டொலர்களாக நாங்கள் மதிப்பிடுவோம். அந்த 900 டொலர்களுக்கே வற் வரி கணக்கிடப்படும்.அத்துடன், 200 டொலர்களாக இருந்த சுங்கக் கட்டணத்தையும் இந்த புதிய நடைமுறையின் ஊடாக நீக்கியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

51 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

47 0 0