உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அரசியல் முடிவுகளில் ஒருதலைப்பட்சம்: சிறிதரனுக்கு எதிராக சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

சிறுபான்மை கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தீர்மானங்களை தானாகவே எடுக்கின்றார். அது தவறான நடவடிக்கை என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் செய்தது தவறான நடவடிக்கை. ஆரம்பத்தில் இருந்து அவர் சிறுபான்மை கட்சிகள் சார்பான அங்கத்தவராக அரசியலமைப்பு சபையில் இருக்கின்றார்.

ஆகவே சிறிய கட்சிகள், சிறுபான்மை கட்சிகள் என்பவற்றின் நிலவரங்கள் என்ன என்பதை அறிந்து கொண்டு அவர் அந்த இடங்களில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஆனால் அவரைப் பொறுத்தவரையில் தானாகவே சில தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்.அது எதிர் தரப்பில் இருக்கக் கூடிய சிறிய கட்சிகளுக்கோ, சிறுபான்மை கட்சிகளுக்கோ விரோதமான முடிவுகளாக இருக்கிறது. அது நாடாளுமன்றத்தில் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகியது.

இதனால் அவரது கட்சியும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. அவரை அந்த பொறுப்பில் இருந்து விலகுமாறு அவரது கட்சி ஆலோசனை கூறியுள்ளது.அவரது நடவடிக்கை வெறுமனே கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பது மாத்திரமல்ல. அதற்கு முன்னர் வந்த நியமனங்களில் கூட அவர் அவ்வாறு நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே, அவர் ஏன் அவ்வாறு நடந்து கொள்கின்றார்.ஏற்கனவே அந்த சபையில் ஆளும் தரப்பு, பிரதமர், சபாநாயகர், எதிர்கட்சி தலைவர் என 19 பேர் இருக்கிறனர்.

அதில் சிறுபான்மை கட்சிகளை பிரதிபலிக்கக்கூடிய ஆளாகத் தான் இவர் இருக்க வேண்டும்.அவர் அவ்வாறு கடந்த காலத்தில் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆகவே, அவரது கட்சியும் அவருக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றது.

அத்துடன் சிறிதரன், ஒரு தமிழ் தேசிய இனத்தைப பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்ற அடிப்படையிலும், தமிழ் தேசிய இனத்திற்கு குரல் கொடுக்கின்றவர் என்ற அடிபபடையிலும் அவர் தான் செய்த நடவடிக்கை சரியா என்பதை சரிப்பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

51 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

47 0 0