உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

விண்வெளிக்கு உங்கள் பெயரை அனுப்பும் அரிய வாய்ப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA, தமது அடுத்தகட்ட நிலவு பயணமான ‘ஆர்ட்டெமிஸ் II’ விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக, உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்களின் பெயர்களை விண்வெளிக்கு அனுப்பும் அரிய வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்படவுள்ள இந்த விண்கலத்தில், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பெயர்களை நிலவுக்கு அனுப்ப நாசா அழைப்பு விடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களின் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறிய SD கார்டில் சேமிக்கப்பட்டு, ‘ஓரியன்’ (Orion) விண்கலத்தின் மூலம் நிலவுக்கு கொண்டு செல்லப்படும்.

இதில் பங்கேற்கும் நபர்களுக்கு ஒரு நினைவுப் பொருளாக, அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட ‘டிஜிட்டல் போர்டிங் பாஸ்’ நாசாவால் வழங்கப்படும்.

இதற்கானப் பதிவுகள் எதிர்வரும் ஜனவரி 21-ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

சுமார் 10 நாட்கள் நீடிக்க உள்ள இந்தச் சோதனைப் பயணத்தில், நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்ய உள்ளனர்.

ஆர்ட்டெமிஸ் II பயணமானது, மனிதர்களை மீண்டும் நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் செல்லும் மற்றும் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது.

விண்வெளி ஆய்வில் பொதுமக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவும், இந்த வரலாற்றுப் பயணத்தில் அவர்களை இணைக்கவும் நாசா இந்த ‘போர்டிங் பாஸ்’ முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான go.nasa.gov/49NQ4mf மூலம் தங்கள் பெயரைப் பதிவு செய்யலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

51 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

47 0 0