உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கிழக்கு மாகாண வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு; நோயாளர்கள் அவதி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்றைய தினம் தொடக்கம் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளதன் காரணமாக வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலைக்கு வருகைதந்த மக்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கினார்கள்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை பதவி நீக்கம் செய்து பக்கச்சார்பற்ற விசாரணையினை முன்னெடுக்குமாறு கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆரம்ப வைத்திய சேவை பிரிவு மற்றும் கிளினிக் சேவைகளில் வைத்தியர்கள் வருகைதராத காரணத்தினால் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மக்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கியதை காணமுடிந்தது.

இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் தமது கோரிக்கைக்கான சாதகமான தீர்வு கிடைக்கும் வரையில் தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினர் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

51 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

46 0 0