பாகிஸ்தான் வணிகவளாகத்தில் தீவிபத்து – அறுவர் உயிரிழப்பு.!
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள எம்.ஏ.ஜின்னா வீதியிலுள்ள ‘குல் பிளாசாவில்’ என்ற அடுக்குமாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் .இதேவேளை 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் பல அடுக்கு அமைப்புகள் மிகவும் சிக்கலான முறையில் இருந்ததால், மீட்புக் குழுவினர் உள்ளே செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாகத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகத் தீ வேகமாகப் பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.