நீரில் மூழ்கி ஒருவர் மாயம்.!
கம்பஹாவில் பெம்முல்ல – எல்லே ஓயாவில், மீகஹமுல்ல குளத்திற்கு நீராடச் சென்ற ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போனவர் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 54 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்குச் சென்று பெம்முல்ல, எல்லே ஓயாவிலுள்ள மீகஹமுல்ல குளத்திற்கு நீராடச் சென்றபோது, நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல்போன நபரைத் தேடும் பணியில் பெம்முல்ல பொலிஸ் கடற்படை குழுவினர் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.