உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

முன்னாள் அமைச்சர்களின் சிறையில் விசேட சோதனை; சிக்கிய பொருட்கள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை அறைகளில் விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது, கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பல உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெலிக்கடை சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் இருவருடன் சேர்த்து சுமார் 150 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு நிதிமோசடி குற்றச்சாட்டில் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

51 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

22 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

46 0 0