உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இஸ்ரேலில் உள்ள வெளிநாட்டினருக்கு பாதுகாப்பு எச்சரிக்கை: தூதரங்கள் வெளியிட்ட அறிவிப்பு.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
43 பார்வைகள்

இஸ்ரேலில் உள்ள வெளிநாட்டினருக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு அடக்குமுறையை பயன்படுத்தி வரும் நிலையில், இதுவரை 3000க்கும் மேற்பட்ட மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.இதையடுத்து ஈரான் தங்கள் நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே சமயம் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அமெரிக்க படைகள் மீதும், இஸ்ரேல் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும், அவசர கால உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் உடனடியாக இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதைப்போல அமெரிக்கா மற்றும் பிரித்தானிய தூதரகங்களும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0