உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

புதிய தலைமைக்கான நேரம் இது… கமேனியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர ட்ரம்ப் அழைப்பு.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
43 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானில் அயதுல்லா அலி கமேனியின் 37 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்லாமிய குடியரசை சவால் செய்யும் போராட்டங்கள் அமெரிக்க இராணுவ பதிலடி அச்சுறுத்தல்களைத் தூண்டியதைத் தொடர்ந்து புதிய தலைமைக்கான நேரம் இது என்று கூறியுள்ளார்.கடந்த இரண்டு வாரங்களாக ஈரான் முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இராணுவத் தலையீட்டை ட்ரம்ப் பலமுறை வலியறுத்தி வந்தார்.ஈரானியர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்றும் அதே நேரத்தில் “உதவி வந்து கொண்டிருக்கிறது” என்று ட்ரம்ப் கடந்த சில் நாட்களுக்கு முன் குறிப்பிட்டிருந்தார்.இரண்டு நாட்களுக்கு முன்பு 800இற்கும் மேற்பட்டவர்களை தூக்கிலிடாமல் இருந்ததுதான் அவர் எடுத்த சிறந்த முடிவு” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஈரானில் வெடித்த வன்முறை சம்பவங்கள் அனைத்திற்கும் ட்ரம்பும் இஸ்ரேலும் முதன்மையான காரணம் என கமேனி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போராட்டக்காரர்களைத் தூண்டிவிடுவதாகவும், ஈரானை விழுங்குவதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், கமேனி மற்றும் ஈரானின் தலைமையையும் ட்ரம்ப் கண்டித்ததோடு, “அந்த மனிதர் ஒரு நோய்வாய்ப்பட்ட மனிதன், அவர் தனது நாட்டை முறையாக நடத்த வேண்டும், மக்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும். மோசமான தலைமை காரணமாக அவரது நாடு உலகிலேயே வாழ்வதற்கு மிகவும் மோசமான இடம் என்று அழைக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0