உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மரண தண்டனை இடம்பெறாததை அடுத்து ஈரான் மீதான டிரம்பின் ‘பேச்சில் தணிவு’.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
54 பார்வைகள்

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை குறித்த எச்சரிக்கையில் மென்மைப் போக்கை வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளில் தணிவு ஏற்பட்டிருப்பதாகவும் பொறுத்திருந்து பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மரண தடனை நிறைவேற்றப்படுவதற்கு எதிராக முன்னதாக கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப், ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கும் சாத்தியம் குறித்தும் குறிப்பிட்டிருந்தார். எனினும் மரண தண்டனைகள் நிறைவேற்றும் திட்டங்கள் இல்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடந்த புதன்கிழமை தெரித்திருந்தார்.ஆர்ப்பாட்டக்காரர்கள் தூக்கிலிடப்படுவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘அனைவரையும் தூக்கிலிடும் திட்டங்கள் எதுவும் இல்லை’ என்று அவர் பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்க தளங்களை தாக்குவதாக ஈரான் கடந்த புதன்கிழமை எச்சரித்த நிலையில் பதற்றம் அதிகரித்தது. பிராந்தியத்தில் இருந்து சிலரை வாப்பஸ் பெற்றதாக அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது. அமெரிக்காவின் இராணுவ தலையீட்டுக்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக மேற்குலாக அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.மத்திய கிழக்கில் உள்ள அமெரிப்பாவின் மிகப்பெரிய தளமான கட்டாரில் இருக்கும் அல் உதைத் விமானப்படை தளத்தில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டிருப்பதாக கட்டார் குறிப்பிட்டிருந்தது.

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடித்து வரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 2,000இற்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உரிமைக் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை அடுத்தே இந்த ஆர்ப்பட்டம் வெடித்ததோடு இது அமெரிக்காவின் தலையீட்டை தூண்டியிருக்கும் அதேநேரம் 1979 இஸ்லாமிய புரட்சியின் பின் நிறுவப்பட்ட ஈரானிய இஸ்லாமிய குடியரசு எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது.இதில் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிராகவே டிரம்ப் நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

குறிப்பாக தற்போது சிறையில் இருக்கும் 26 வயது உர்பாக் சொல்தானி தொடர்பிலேயே அவதானம் அதிகரித்திருந்தது. மெஹ்ரானுக்கு வெளியே உள்ள கராஜ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவர் மீது ஈரானுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கு எதிராக செயற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.எனினும் சொல்தானி மீது மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை என்று ஈரான் நீதித் துறை தெரிவித்துள்ளது. அவர் மீது குற்றங்காணப்பட்டால் சட்டத்தின்படி தண்டனை வழங்கப்படும் என்றார். இவ்வாறான குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை இல்லை என்றும் அது குறிப்பிட்டார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த டிரம்ப், ‘கொலை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சில நேரம் இன்று (15) பல மரண தண்டனைகள் நிறைவேற்றப்படவிருந்ததோடு அந்த மரண தண்டனைகள் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என்பதை நாம் கண்டிறிந்துள்ளோம்’ என்றார்

.இதன்போது ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைக்கான திட்டம் கைவிடப்பட்டுள்ளதா என்று ஓவல் அலுவலகத்தில் வைத்து டிரம்பிடம் ஏ.எப்.பி. செய்தியாளர் கேட்டதற்கு, ‘அந்த செயற்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்’ என்றார்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது விரைவாக விசாரணை நடத்தப்படும் என்றும் சில கைதிகள் ‘இறைவனுக்கு எதிராக போர் தொடுத்த’ குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்கொண்டிருப்பதாகவும் ஈரான் அரச வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் உளவு பார்த்த குற்றச்சாட்டில் வெளிநாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்பு இன்னும் குறையாத நிலையில் பிராந்தியத்தில் தொடர்ந்து பற்றம் நீடித்து வருகிறது.

டெஹ்ரானில் உள்ள பிரிட்டன் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக அந்த நாடு அறிவித்திருக்கும் அதேநேரம், சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரக பணியாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் இராணுவ நிலைகளை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரானில் இருந்து தமது பிரஜைகளை வெளியேறும்படி இந்தியா அறிவுறுத்தியுள்ளது.ஜெர்மனியில் லுப்தான்சா விமானசேவை, மறு அறிவித்தல் வரை ஈரான் மற்றும் ஈராக்கிய வான் பரப்புகளை தவிர்ப்பதாக தெரிவித்துள்ளது.

எனினும் ஈரான் தற்காலிகமாக மூடிவைத்த ஆகாயவெளியை மீண்டும் திறந்துள்ளது. ஐந்து மணி நேரம் ஆகாயவெளி மூடப்பட்டதால் பல விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதம் அடைந்தன.நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் ஈரான் தனது ஆகாயவெளியை மூடியது. ஈரானுக்குச் செல்லும், அங்கிருந்து புறப்படும் அனைத்துலக விமானங்களுக்கு மட்டுமே பறக்க அனுமதி வழங்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

38 0 0