உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அவுஸ்திரேலியாவின் திடீர் வெள்ளம் – கடலுக்கு அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
58 பார்வைகள்

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடற்கரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் சில மணித்தியாலங்களுக்குள் சுமார் 169 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.இந்தத் திடீர் மழையினாலேயே குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்தநிலையில், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள அவசர நிலையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு பொலிஸாரும் அவசர சேவைப் பிரிவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0