உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கிரீன்லாந்துக்கு பாதுகாப்பு வீரர்களை அனுப்ப மாட்டோம் – போலந்து பிரதமர் அறிவிப்பு.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
55 பார்வைகள்

கிரீன்லாந்திற்கு போலந்து வீரர்களை அனுப்ப மாட்டோம் என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் நேற்று (15) அறிவித்தார்.கிரீன்லாந்து அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது என்றும், ரஷ்யா அல்லது சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.இந்நிலையில் இதற்குப் பதிலளித்து டொனால்ட் டஸ்க் கூறியதாவது:

நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இடையே நிலப்பரப்பைக் கைப்பற்ற முயற்சிப்பது ‘நமக்குத் தெரிந்த உலகின் முடிவு’ என்றும், இது ஒரு அரசியல் பேரழிவு என்றும் எச்சரிக்கிறேன்.

பிரான்ஸ், ஜேர்மனி, சுவீடன், நோர்வே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புப் பயிற்சிக்காகத் தங்கள் வீரர்களை கிரீன்லாந்திற்கு அனுப்பியுள்ள நிலையில், போலந்து அந்த முடிவில் சேரப்போவதில்லை என்று தெளிவுபடுத்துகிறேன்.

வீரர்களை அனுப்ப மறுத்தாலும், இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமையாகச் செயற்படுவதை உறுதி செய்வேன்.இவ்வாறு டொனால்ட் டஸ்க் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0