உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

குண்டு அச்சுறுத்தல் – அவசரமாக தரையிறக்கப்பட்ட துருக்கிய விமானம்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
30 பார்வைகள்

துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று குண்டு அச்சுறுத்தல் காரணமாக பார்சிலோனாவின் எல் பிராட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

பயணி ஒருவர், வெடிகுண்டு அச்சுறுத்தல் அடங்கிய வயர்லெஸ் இணைய வலைப்பின்னல் ஒன்றை கண்ட நிலையிலேயே குறித்த விமானம் அவசரமாக ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா எல் பிராட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இஸ்தான்புல்லில் இருந்து புறப்பட்ட விமானம் பார்சிலோனாவில் உள்ள அதன் இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தபோது, “ஒரு பயணி விமானத்திற்குள் ஒரு இணைய அணுகல் புள்ளியை நிறுவி, வெடிகுண்டு மிரட்டலை உள்ளடக்கிய நெட்வொர்க் பெயரை அமைத்திருப்பது கண்டறியப்பட்டது என துருக்கியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், விமான நிலையம் வழக்கம் போல் இயங்குவதாகவும் ஸ்பெயினின் சிவில் காவல் படை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0