உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மரண தண்டனை தொடர்பாக வெளியான செய்திகளை முற்றாக மறுக்கும் ஈரான்.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
44 பார்வைகள்

ஈரானில் நடந்து வரும் மக்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 26 வயதான எர்ஃபான் சொல்தானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட உள்ளதாக வெளியான செய்திகளை ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நோர்வேயை தளமாகக் கொண்ட ‘ஹெங்காவ்’ (Hengaw) என்ற மனித உரிமை அமைப்பு, எர்ஃபான் சொல்தானிக்கு கடந்த புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்ததாகவும், பின் அது ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில் எர்ஃபான் சொல்தானி மீது “தேசிய பாதுகாப்புக்கு எதிராக சதி செய்தல்” மற்றும் “அரசுக்கு எதிரான பிரசாரம்” ஆகிய குற்றச்சாட்டுகள் மட்டுமே சுமத்தப்பட்டுள்ளன என்றும், இவற்றுக்கு மரண தண்டனை வழங்க சட்டத்தில் இடமில்லை என்றும் ஈரான் நீதித்துறை விளக்கியுள்ளது.இது ஒரு “திட்டமிட்ட போலிச் செய்தி” என்றும் ஈரான் கூறியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தப் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றினால் ஈரான் மீது மிகக் கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.தற்போது மரண தண்டனை இல்லை என்ற செய்தியை அடுத்து, “இது நல்ல செய்தி, இது தொடரும் என்று நம்புகிறேன்” என ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0