உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

விசாரணைகளின்றியே தண்டனை – ஈரானில் அதிரடி.!

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
37 பார்வைகள்

ஈரானில் கடந்த வாரம் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட எர்பான் சொல்தானி என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் எந்தவிதமான முறையான விசாரணைகளுமின்றி இன்று (14) தூக்கில் இடப்படுகிறார்.

இந்நிலையில், ‘எர்பானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது. ஜனவரி 14இல் தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுவிட்டது’ என நோர்வே நாட்டை அடிப்படையாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் விடுதலைக்கு குரல் கொடுத்தது மட்டுமே அவரது குற்றம் எனக் குறிப்பிட்டு எர்பானின் மரண தண்டனையை தடுத்து நிறுத்தும்படி சர்வதேச சமூகத்துக்கு ஈரானின் பல்வேறு மனித உரிமை குழுக்களும் அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் அவர் கடவுளுக்கு எதிராக போர் செய்கிறார் என குற்றச்சாட்டு பதிவாகியுள்ளதோடு, அவர் தரப்பில் வாதிடுவதற்கு வழக்கறிஞரின் அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0