உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மீண்டும் இணையும் இந்தியா – அமெரிக்கா !

உலக செய்திகள் 8 மாதங்கள் முன்
40 பார்வைகள்

இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக நேற்று பொறுப்பேற்ற செர்ஜியோ கோர், ”இந்தியாவை தவிர, வேறு எந்த நாடும் எங்களுக்கு முக்கியமல்ல எனவும் பிரதமர் மோடியுடனான, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நட்பு உண்மையானது, எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பதாக, அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நாள் முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூறி, அமெரிக்க ஜனாதிபதி பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுத்தார்.இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க வரி விதிப்பால், இந்திய வர்த்தகர்கள் பாதிப்படைவதை தடுக்க, ஐரோப்பா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுடன் பிரதமர் மோடி வர்த்தக ஒப்பந்தம் செய்து வருகிறார்.மேலும், ஜனாதிபதி டிரம்புடன் பேசுவதை கூட, பிரதமர் மோடி தவிர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக உடன்பாடு குறித்த அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை இன்று துவங்கவுள்ளது.இதையொட்டி, டில்லிக்கு வருகைதந்த அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் மனக்கசப்பு விரைவில் நீங்கும், என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதேவேளை அழைப்பு வரும் பொழுது , அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அடுத்த ஆண்டோ, அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ நிச்சயம் இந்தியாவுக்கு வருகைதருவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0